Reading Time: < 1 minute
Tamil Business Directory
மெட்ரோ வன்கூவரில் பட்டுல்லோ பாலத்துக்கு மாற்று பாலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
சர்ரே மற்றும் நியூ வெஸ்ட்மின்ஸ்டரை இணைக்கும் இப்பாலம், 1.4 பில்லியன் டொலர்கள் திட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. பரந்த பாதைகளுடன் புதிய நான்கு வழி பாலமாக இப்பாலம் கட்டப்படவுள்ளது.
விரிவாக்கப்படும் பாலத்தில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான பிரத்யேக பாதைகளும் அடங்கும். பாலத்தை ஆறு பாதைகளாக விரிவாக்க அனுமதிக்கும் வகையில் இது கட்டப்படும்.
2023ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் புதிய பாலம் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இப்பாலத்திற்கான நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.




