Reading Time: < 1 minute

மிசிசாகாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த 28 வயது ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Britannia Road மற்றும் Hurontario Street பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த விடுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவ இடத்திலிருந்து சந்தேக நபர் கால்நடையாகவே தப்பியோடிச் சென்றுள்ளதாகத் தோன்றுவதாகவும், சந்தேக நபர் சுமார் ஆறு அடி உயரமான, மொட்டைத் தலையுடைய கறுப்பு இன ஆண் என்றும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், எனினும் இந்தச் சம்பவத்தினால் ஏனைய பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.