மிசிசாகாவில் இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிசிசாகா சாலைக்கு மேற்கே அமைந்துள்ள டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் சர் ஜான்ஸ் ஹோம்ஸ்டெட் பகுதிக்கு, இரவு சுமார் 11 மணியளவில் காவல்துறையினர் அவசரமாக அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆரம்பத்தில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் இருவரதும் உடல்நிலை சீராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு பலத்த காயங்களும், மற்றொருவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்காக சம்பவ இடத்தில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்தும், சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் இதுவரை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.