Reading Time: < 1 minute

போலியான ஆவணங்களை பயன்படுத்தி வாகனம் வாங்கி பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒருவரை தேடி டர்ஹம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Business Directory

இந்த மோசடி சம்பவம் 2025 பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்றுள்ளது. பின்னர், கடந்த கோடைக்காலத்தில் நிதி குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

குறித்த நபர், பிக்கரிங் நகரில் உள்ள வாகன விற்பனை நிலையத்துக்கு சென்று, புதிய Hyundai Elantra கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

இதற்காக போலியான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது வாகனத்திற்கு எந்தவித கட்டணமும் செலுத்தப்படவில்லை, பின்னர் அந்த கார் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது மேலும், கார் வாங்கிய ஒரு வாரத்துக்குள் சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

36 வயதான ஒவிடு லொன்அவுட் துமித்துரு என்ற நபரே இந்த மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் பெற பொய்யான தகவல் வழங்கல், கடனாளர்களை தவிர்க்க சொத்துகளை மாற்றுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.