Reading Time: < 1 minute
Tamil Business Directory
கோவிட் தொடர்பான தடுப்பூசி, முகக்கவசம் மற்றும் பரிசோதனை விலக்கு கடிதங்களை ஆயிரத்திற்கும் அதிகமாக வழங்கி லாபம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒரு டொராண்டோ மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டொக்டர் கெலிஸ்டி ஜீன் திரிவெல் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மொத்தம் 1,425 கோவிட் விலக்கு கடிதங்கள் வழங்கியுள்ளார்.
இதில், 999 – தடுப்பூசி விலக்கு, 230 – முகக்கவச விலக்கு, 196 – பரிசோதனை விலக்கு கடிதங்கள் உள்ளடங்குகின்றன.
இந்த கடிதங்கள் அனைத்தும் மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், லாப நோக்கில் வழங்கப்பட்டவை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விலக்கு கடிதத்திற்கு 300 டொலர் வரை பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.




