Reading Time: < 1 minute

இந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் (Booker) விருதினைப் பெற்றுக்கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடாவைச் சேர்ந்த 79 வயதான பெண் எழுத்தாளர் மார்க்கரெட் அற்வூட் (Margaret Atwood) பிரித்தானியாவைச் சேர்ந்த 60 வயதான பெண் எழுத்தாளர் பேர்னர்டீன் எவரிஸ்ரோ (Bernardine Evaristo) ஆகிய இருவரே இந்த விருதினை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

கடந்த 1992ஆம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது.

எனினும், மார்க்கரெட் அற்வூட் எழுதிய தி ரெஸ்ரமென்ற்ஸ் (The Testaments), பேர்னர்டீன் எவரிஸ்ரோ எழுதிய Girl, Woman, Other ஆகிய இரண்டு நாவல்களும் சம அளவிலான தகுதி பெற்றன.

இதன்காரணமாக விதியை தளர்த்தி இருவருக்கும் புக்கர் விருதை பகிர்ந்தளிக்க தேர்வுக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

பேர்னர்டீன் எவரிஸ்ரோ புக்கர் விருது பெறும் முதல் கருப்பினப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.