Reading Time: < 1 minute

பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

ஒன்றாரியோ கான்செகன் அருகே உள்ள கவுண்டி வீதி 1 மற்றும் அலெக்சாண்டர் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

எனினும், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, இந்த விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்பு பட்டுள்ள என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

காயமடைந்தவர்களில் தெரியாத வயதுடைய ஒரு சிறு குழந்தை உள்ளதாவும், காயமடைந்தவர்களின் காயத்தின் தன்மை குறித்தும் தற்போது கூறமுடியாதுள்ளதாக ஒன்ராறியோ பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பில் டிக்சன் தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவிலிருந்து தென்மேற்கே 214 கிலோமீட்டர் தொலைவில், கான்செகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.