Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியா- நெல்சன் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது, காணமல்போன இரு சிறுவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Tamil Business Directory

வயிட்வாட்டர் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள பகுதியில் குறித்த இரண்டு சிறுவர்களும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) காணாமல்போனதாக பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.

இரவு வேளையில் அழைப்பு கிடைத்த போது, வானிலை மோசமடைந்ததால் சிறுவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. ஹெலிகொப்டர் மூலம் தீவிர தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்த போது மீட்புக் குழுவினர் குறித்த இரண்டு சிறுவர்களையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.

குறித்த இரண்டு சிறுவர்களும் 16 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள நெல்சன் தேடல் மற்றும் மீட்பு மேலாளர் ஜிம் கைல், இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என கூறியுள்ளார்.