பிராம்ப்டனில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Finch Avenue மற்றும் Steeles Avenue அருகிலுள்ள Parkshore Drive பகுதியில், இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் Peel பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்தவர் “வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவிலான கடுமையான காயங்களுக்கு” உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவர் எந்த நிறுவனத்தில் பணியாற்றினார், விபத்து எவ்வாறு ஏற்பட்டது, தற்போதைய உடல்நிலை என்ன என்பது தொடர்பான மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.