Reading Time: < 1 minute

இன்று காலை வேளையில் பிரம்டனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Williams Parkway மற்றும் Torbram வீதிப் பகுதியில், Josephine Courtஇல் இன்று காலை 5:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகே, பத்து நிமிடத்தின் பின்னர் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா என்பது தெரியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக நெடுஞ்சாலை 410இன் ஒரு பகுதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகள் தொடர்கின்ற போதிலும், இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் சந்தேக நபர்கள் எவரையாவது தேடுகின்றனரா இல்லையா என்பது தெரியவில்லை.

விசாரணை நடவடிக்கைகள் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், இந்தச் சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது இல்லை என்று எண்ணுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.