Reading Time: < 1 minute

நேற்று பிற்பகல் வேளையில் பிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இருவரும் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

Bayly Streetற்குத் தெற்கே, Brock Road மற்றும் Dillingham Road பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதனை டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்றின் சாரதி சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.