Reading Time: < 1 minute

‘பாங்க் ஒஃப் கனடா அதன் முக்கிய வட்டி விகிதத்தை இன்று (புதன்கிழமை) மாற்றாமல் விட்டுவிடும் என்று கனடா பங்குச்சந்தை கண்காணிப்பு நிபுணர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tamil Business Directory

ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து கூர்மையாக அவதானித்து வருகின்றனர்.

அதேவேளை, ‘பாங்க் ஒஃப் கனடா அதன் வட்டி விகிதத்தை ஒரே இரவில் 1.75% ஆக வைத்திருக்கும் என்று கணித்துள்ளது.

தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற கனேடிய அரசாங்கப் பத்திரங்களின் 11 முதன்மை விற்பனையாளர்களில் 10 பேரின் பொருளாதார வல்லுநர்கள் இந்தக் கணிப்பீட்டை வௌியிட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதம் கடந்த ஆண்டு ஒக்ரோபர் முதல் இதே மட்டத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.