Reading Time: < 1 minute

நேற்று காலை வேளையில் நோர்த் யோர்க் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன்போது காயமடைந்த ஒரு தீயணைப்பு படை வீரர் உள்ளிட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

Wilson Avenue west மற்றும் Allen Road பகுதியில், வர்த்தக நிறுவனம் ஒன்றின் மேலே அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், நேற்று அதிகாலை 3:20 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றடைந்த ரொரன்ரோ தீயணைப்பு படையினர், அங்கே முழு அளவிலான தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவ இடத்திலிருந்து தீயணைப்பு படை வீரர் உள்ளிட்ட இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.