Reading Time: < 1 minute

Cottage country பகுதியில் ஆற்றில் நீந்திய ஒருவர் நீரினுள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

Bracebridge Bay Parkகில் உள்ள முஸ்கோகா (Muskoka) ஆற்றில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த ஆற்றில் நீந்திய 21 வயது இளைஞர், சிறிது நேரமாகியும் நீரினுள் இருந்து வெளியே வராததை அடுத்து சம்பவ இடத்திற்கு அவசர மீட்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் உடனடியாகச் செயற்பட்டு, குறித்த அந்த இளைஞரை நீரினுள் இருந்து வெளியே கொண்டுவந்த வேளையில், அவர் சுயஉணர்வற்ற நிலையில் காணப்ப்ட்டதாகவும், உடனடியாகவே Bracebridgeஇல் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.