Reading Time: < 1 minute

White Rock பகுதியில் தனது இரண்டு நாய்கள் தொடரூந்தில் மோதப்படுவதில் இருந்து காப்பாற்ற முயன்ற Surreyஐச் சேர்ந்த 58 வயது ஆண் ஒருவர் தொடரூந்தினால் மோதப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில், Semiahmoo பூங்காவுக்க அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த அந்தப் பகுதியில் உள்ள தொடரூந்து தடத்தில் அவரது இரண்டு நாய்களும் நின்றுகொண்டிருந்த போது, அந்த வழியே தொடரூந்து ஒன்று மெதுவாக நகர்ந்து வந்ததாகவும், அது நாய்கள் மீது மோதிவிடும் என்று பயந்த நபர் தண்டவாளத்தினுள் குதித்த வேளையில் அவர் தொடரூந்தினால் மோதுண்டதாகவும், நாய்களுக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடரூந்தில் மோதுண்டவரின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது அவர் அவசர மருத்துவ அதிகாரிகளுடன் உரையாடியதாகவும் கனேடிய மத்திய காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.