Reading Time: < 1 minute

நயாகராவில் உள்ள வெயின்ஃப்லீட் பகுதியில் மூன்று முகமூடி அணிந்த கொள்ளையர்கள், ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

இதைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை பற்றிய தகவலுக்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சம்பவம் மே 29 ஆம் திகதி மாலை 4:35 மணியளவில், ஹைவே 3 அருகேயுள்ள மெரிடியன் கிரெடிட் யூனியன் Meridian Credit Union வங்கியில் இடம்பெற்றுள்ளது.

முகமூடி அணிந்த மூன்று சந்தேகநபர்கள் வங்கிக்குள் நுழைந்து, ஆயுதங்களை காண்பித்து மிரட்டி பணத்தைக் கொடுக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்ததாகவும், மற்றொருவர் வாள் போன்ற கூரிய ஆயுதத்துடன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையின் பிறகு, சந்தேக நபர்கள் 2019 முதல் 2021 மாடல் வரை உள்ள வெள்ளை நிற Honda Civic EX காரில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அந்தக் காரில் முன்பக்க கண்ணாடிகள் கருப்பாக்கப்பட்டிருந்தன.

அந்த வாகனம் கடைசியாக ஹைவே 3 வழியாக வடக்கே மிக வேகத்தில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மே 29 அன்று மாலை 4 மணி முதல் 5:30 மணி வரை அந்தப் பகுதியில் இருக்கும் வீடு, வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு கமரா காட்சிகளை பரிசீலிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களின் புகைப்படங்கள் மற்றும் வாகனத்தின் படங்களும் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.

தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக நயாகரா பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.