Reading Time: < 1 minute

கனடாவின் அனைத்து நகரபிதாக்களும் இன்று பிற்பகல் ரொரன்ரோவில் ஒன்றுகூடி, போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் அவற்றைச் சரிசெய்வதற்கான கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

Tamil Business Directory

கனேடிய தேசிய நகரப் போக்குவரத்துக கழக அதிகாரிகள் மாநாடு இடம்பெறும் இந்த நிலையில், அந்த மாநாடு இடம்பெறும் சென் லோறன்ஸ் மார்கெட் பகுதியில் நகரபிதாக்களின் இந்தத் தனிப்பட்ட சந்திப்பு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியுள்ளது.

பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக மத்திய அரசின் நிதி வழங்கும் திட்டம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டுடன் காலாவதியாகவுள்ள நிலையில், நிலையான போக்குவரத்து கட்டுமான நிதியளிப்பு பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு இந்த நகரபிதாக்கள் குழு இன்றைய இந்தக் கூட்டம் ஊடாக மத்திய அரசினைக் கோரும் என்று தெரிவிக்கப்படுகிறது.