Reading Time: < 1 minute
Tamil Business Directory
வின்னிபெக்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வின்னிபெக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்திருந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.




