Reading Time: < 1 minute

தண்டர் பேயில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் பின்னர், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

கிளாவெட் வீதியின் 200 தொகுதிகளில் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) தண்டர் பே பொலிஸ் சேவை, நிஷ்னாவ்பே அஸ்கி பொலிஸ் சேவை மற்றும் ஒன்றாரியோ அதிகாரிகள் விஷேட தேடுதல் நடவடிக்கையொன்றினை நடத்தினர்.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான கோகோயின், கிராக் கோகோயின் மற்றும் ஃபெண்டானைல் மற்றும் பணம் என்பவற்றினை வைத்திருந்த குற்றச்சாட்டில், நால்வரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 40 வயதுடைய இரண்டு தண்டர் பே பெண்கள், 18 வயது ரொறன்ரோ ஆண் மற்றும் 17 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வீட்டில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்த போதைப் பொருட்களின் பெறுமதி 36,000 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நால்வரையும் காவலில் எடுத்துள்ள பொலிஸார், இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.