Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

பெண் நோயாளி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண்ணின் உடல் பாகங்கள் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை குறித்த குடும்ப மருத்துவர் வெளியிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த நோயாளி முறற்பபாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை விசாரணை செய்த ஒழுக்காற்று தீர்ப்பாயம், மருத்துவரை மூன்று மாதங்களுக்கு பணி இடைநிறுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பெண் நோயாளியை குறித்த நபர் இரண்டு தடவைகள் பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.