Reading Time: < 1 minute

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் COVID 19 தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் (13.04.2020) திங்கட்கிழமை உயிரிழந்தார்.

இவருடைய கணவர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்களின் பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.