Reading Time: < 1 minute

கிழக்கு யார்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

பேவியூ அவென்யூ மற்றும் பாட்டரி ரோடு சந்திப்புக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

37 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், 2025 மாடல் சிவப்பு நிற டுகாட்டி மோட்டார் சைக்கிளில் பேவியூ அவென்யூவின் தெற்கு திசை நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையின் மையக் கோட்டைத் தாண்டி எதிர்புறமாக வந்து கொண்டிருந்த கருப்பு நிற ஹோண்டா சிஆர்வி காரின் மீது பலமாக மோதியுள்ளது.

இந்தக் கொடூர மோதலில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஹோண்டா காரை ஓட்டி வந்த 32 வயது நபர், விபத்து நடந்த இடத்திலேயே தங்கி பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

இந்த விபத்து காரணமாக பேவியூ அவென்யூவின் இருபுறமும் போக்குவரத்து பல மணி நேரம் முழுமையாக முடக்கப்பட்டது.

இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து டொராண்டோ போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.