Reading Time: < 1 minute
Tamil Business Directory
2023 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முதல் 13 நாட்களில் மாத்திரம் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன்படி, ஒரு 73 ஆயிரத்து 590 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதில், இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்து 704 பேரும், ரஷ்யாவில் இருந்து 10 ஆயிரத்து 573 பேரும், லண்டனில் இருந்து 7 ஆயிரத்து 250 பேரும் மற்றையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் இதுவரை 13 இலட்சத்து 50 ஆயிரத்து 541 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.




