Reading Time: < 1 minute

சர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Tamil Business Directory

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒத்துழைப்பு பிரிவின்கீழ் சீன மொழி நிலையமொன்றை எமது நாட்டில் ஸ்தாபிப்பதற்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வரையறுக்கப்பட்ட சீனா வங்கிக்கும் இடையிலான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு குறித்த தரப்பினர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஐந்து (05) வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.