Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது.

Tamil Business Directory

இறுதி நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 6,877பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றால் 112பேர் உயிரிழந்ததோடு, 993பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,512ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 34,795பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 46,840பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,613பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.