Reading Time: < 1 minute
Tamil Business Directory
கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையிலான முன்பகை காரணமாகவே நேற்றிரவு(புதன்கிழமை) இந்தக் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




