Reading Time: < 1 minute

கல்கரியில் அதிகமான பனிப்பொழிவை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெயார் ட்ரை, ப்ரூக்ஸ், வுல்கன், மெடிசின் ஹெட், ஹை ரிவர் ஆகிய இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஆல்பர்ட்டாவில் இருந்து குறைந்த அழுத்த நகர்வொன்று, மாகாணத்திற்குள் நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) 10 முதல் 15 சென்டிமீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், நெடுஞ்சாலைகள், வீதிகள், நடைப்பாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற மேற்பரப்புகளில் பனி குவிந்து இருக்குமெனவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களத்தின் இணையதளத்தில் வானிலை எச்சரிக்கைகளின் புதுப்பித்த பட்டியலை, மக்கள் அடிக்கடி அவதானித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.