Reading Time: < 1 minute

கரீபியன் தீவுகளின் அன்டிகுவா – பார்புடாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவர் சுண்ணாம்புக் கற்பாறையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

டெவில்ஸ் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் பிரபல சுற்றுலாப் பகுதியில் இந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கனடாவைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பாலத்தை போன்று அமைந்துள்ள கற்பாறையில் இருந்து குறித்த நபர் கீழே வீழ்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

கற்பாறையிலிருந்து 30 மீற்றர் தொலைவில் குறித்த நபரை கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளது.