Reading Time: < 1 minute

கனடா மனிடோபாவில் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Tamil Business Directory

31 வயதான கெவின் பிராவுன் என்ற ஆசிரியருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 வயது மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.

இந்த ஆசிரியர் குறித்த சிறுமியின் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் குறித்த ஆசிரியர் இன்ஸ்டகிராம் ஊடாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் ஆயிரக் கணக்கான தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளார்.

பகல் இரவாக இருவரும் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார் எனவும் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விசாரணைகளின் மூலம் ஆசிரியர் குற்றமிழைத்தமை நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.