Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக இரு நாடுளும் ராஜதந்திரிகளை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், வீசா சேவைகளும் பாதிக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக கனடியர்களுக்கு ஈ வீசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈ வீசா வழங்கும் நடைமுறை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் காரணமாக இரு தரப்பு உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டது.
சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் காரணமாக இரு தரப்பு உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டது.