கனடாவின் எல்லை பகுதிக்குள் அத்து மீறி பிரவேசித்த சாரதி ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்க எல்லை பகுதியிலிருந்து கனடிய எல்லை பகுதி பகுதிக்குள் குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை கனடிய எல்லை பாதுகாப்பு முகவர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில வாகன இலக்கத் தகட்டைக்கொண்ட வாகனம் ஒன்றே இவ்வாறு தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன அதிகாரிகளின் உத்தரவிற்கு கட்டுப்படாது வாகனத்தைச் செலுத்தியதாகவும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சிறு விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




