Reading Time: < 1 minute
Tamil Business Directory
மார்க்கம் நகரில் மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்பிற்கு அருகில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடந்த வாகனவிபத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து டெனிசன் தெரு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் இடையே மார்க்கம் சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டது.
யோர்க் பிராந்திய காவல்துறையின் விபத்து பிரிவு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் சம்பந்தப்பட்ட டிரக் சிவப்பு விளக்கை மீறி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ஒருவர் Sunny brook hospitalலில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இருவரும் 21 வயது நிரம்பிய செல்வி நிலா மற்றும் செல்வன் பாரி (சகோதர சகோதரிகள்) என்பது தெரிய வந்துள்ளது.




