Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் பெர்லிங்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தனி ஒரு வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
சில்வர் மிட்சுபிஷி செடன் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் 47 வயதான ஆண் ஒருவரும் 41 வயதான பெண் ஒருவரும் உயிர் இழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிறிய நாய் ஒன்றும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகாமையில் இருந்த மதில் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்த இருவரும் ஹமில்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




