Reading Time: < 1 minute

மிஸ்ஸசாகா பகுதியில் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 96 மற்றும் 66 வயதுடைய வயோதிப பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

Tamil Business Directory

இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது என்பதுடன் இவை இரண்டும் இரு வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

96 வயதான வயோதிப பெண் வீதியில் நடந்து செல்லும் போது குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தப்பி சென்றுள்ளார்.

45 நிமிடங்களில் பின்னர் 66 வயதான மற்றும் ஒரு பெண்ணை குறித்த அதே நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த துன்புறுத்தல் சம்பவங்களில் இரண்டு வயோதிப பெண்களும் உடல் ரீதியான காயங்களை பெண்களுக்கு உடல் ரீதியான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஐந்து அடி எட்டு அங்குலம் உயரமுடிய ஒரு நபரே இவ்வாறு குற்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.