Reading Time: < 1 minute

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் குறித்து இந்திய தரப்பின் கருத்தை முன்வைத்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர்.

Tamil Business Directory

கனடா அரசியல், காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளித்துள்ளது என்றும், கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.

இப்படி அரசியலில் காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுதான் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட காரணம் என தான் கருதுவதாக தெரிவித்த அமைச்சர், அதனால் இந்தியாவுக்கும் பயனில்லை, கனடாவுக்கும் பயனில்லை, துரதிர்ஷ்டவசமாக, அதுதான் கனடா அரசின் நிலைப்பாடாக உள்ளது என்றார்.