Reading Time: < 1 minute

கனடாவில் 50000 டொலர்கள் பெறுமதியான லொத்தர் சீட்டு ஒன்றை களவாடியதாக இரண்டு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பரிசு வென்றெடுக்கப்பட்ட லொத்தர் சீட்டு இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஒன்றாரியோவில் மிட்செலில் அமைந்துள்ள கடையொன்றில் பணியாற்றும் பணியாளர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த லொத்தர் சீட்டை பணியாளர் ஒருவர் களவாடியதாகவும் அவரது உதவியாளர் அந்த பணப் பரிசினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

44 வயதான அனிட்டா ரஸல் மற்றும் 51 வயதான மெலெனி தொம்சன் ஆகியோர் இவ்வாறு லொத்தர் சீட்டு களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.