Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் 4.6 பில்லியன் டொலர் கோவிட் நிதியுதவி தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கனேடிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் அவசர நிதி உதவியாக வழங்கப்பட்ட நிதி உதவிகளில் 4.6 டொலர்கள் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் சுமார் 211 பில்லியன் கோவிட் உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் உதவு தொகைகள் வழங்கப்பட்ட போது விண்ணப்பதாரிகளின் தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படாது வழங்கப்பட்டுள்ளது.

சில விண்ணப்பதாரிகள் போலியான தகவல்களை வழங்கி உதவு தொகை பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி குறித்து கண்டறிந்து அவர்களிடமிருந்து அவற்றை மீள அறவீடு செய்யப்பட வேண்டுமென கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.