Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

ரொறன்ரோவிலிருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ள கோச்சரான் (municipality of Cochrane, Ontario) என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்போக்கு அமைப்புக்களைப் போன்று தமது மாநகராட்சி செயற்படுவதாக கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார்.

கோச்ரான், ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயண தூரத்தில் அமைந்துள்ளது.

பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடிய காணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.

புதிய வீடுகளை நிர்மானிப்பதற்காக இவ்வாறு குறைந்த விலையில் காணிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு குறைந்த விலையில் காணிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.