கனடாவில் 15 பில்லியன் டொலர் மதிப்பிலான மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலையை அமைக்கும் திட்டத்தை ஜப்பானைச் சேர்ந்த Honda Motors நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், வட அமெரிக்க சந்தையில் ஹைபிரிட் வாகன உற்பத்திக்கே அதிக முக்கியத்துவம் வழங்க ஹொண்டா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகளாவிய வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கைகள் காரணமாக வாகன உற்பத்தியாளர்கள் அதிக அழுத்தத்தை சந்தித்து வருவதாக கனடிய தொழில் அமைச்சர் Melanie Joly அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் குறித்து ஹொண்டா ஏற்கனவே 2025 மே மாதத்தில் இரண்டு ஆண்டுகள் ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. அப்போது சந்தை நிலவரத்தை மதிப்பீடு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Toshihiro Mibe தெரிவித்திருந்தார்.
2028ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆலை தொடர்பாக தற்போது மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என Honda Canada
தெரிவித்துள்ளது.
மின்சார வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக பல முன்னணி வாகன நிறுவனங்களும் தங்களது முதலீட்டு திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.