Reading Time: < 1 minute

கனடாவில் சிறுவயது முதல் வசித்து வந்த பிரபல நடிகரும், மொடலுமான கோட்பிரி காவோ (Godfrey Gao) 35 வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தைவானில் பிறந்த Godfrey Gao இளம் வயதிலேயே கனடாவின் வான்கூவருக்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்.

கனடாவிலுள்ள கபிலனோ பல்கலைக்கழகத்தில் தனது மேற்கல்வியை நிறைவு செய்து கொண்ட Godfrey Gao பின்னர் மொடலிங் துறை மற்றும் சினிமா துறையில் நுழைந்து பிரபல நடிகராக மாறினார்.

இந்தநிலையில் கடுமையான ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட Godfrey Gao (நேற்று) செவ்வாய்கிழமை தொடங்கம் அடுத்த 17 மணி நேரத்துக்கு இடைவிடாமல் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொண்டிருந்தார்.

அப்போது அதிகாலை 2 மணியளவில் Godfrey Gao வுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் கீழே சரிந்து விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.