கனடாவில் ஈஸ்டர் வார இறுதி விடுமுறை பலருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற லோட்டோ மேக்ஸ் (Lotto Max) குலுக்கலில் மொத்தம் பத்து “மாக்ஸ்மில்லியன்ஸ்” பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் லோகன் லேக் மற்றும் கியூபெக் பகுதிகளைச் சேர்ந்த இருவர் தலா 1 மில்லியன் டாலர் வென்றுள்ளனர்.
70 மில்லியன் டாலர் மதிப்பிலான ஜாக்பாட் பரிசை எவரும் கைப்பற்றாத நிலையில், இரண்டாம் பரிசை வென்ற ஒண்டாரியோவைச் சேர்ந்த இருவர் தலா 141,274 டாலர் பெற்றுள்ளனர். மார்ச் 3 ஆம் தேதிக்குப் பிறகு இதுவரை முதன்மை ஜாக்பாட் வெற்றி பெறப்படாததும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற லோட்டோ 6/49 (Lotto 6/49) குலுக்கலில், ஒண்டாரியோவில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட் 1 மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளது. கோல்ட் பால் மற்றும் கிளாசிக் டிரா ஆகியவற்றின் முதன்மை பரிசுகள் எவராலும் வெல்லப்படாத நிலையில், கியூபெக்கில் ஒருவர் இரண்டாம் பரிசாக 229,642 டாலர் பெற்றுள்ளார்.
இதனால், அடுத்ததாக ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள குலுக்கல்களுக்கு ஜாக்பாட் தொகைகள் அதிகரித்து, முறையே 75 மில்லியன் மற்றும் 25 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன.
லாட்டரி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் போது அபாயங்கள் இருப்பதை நினைவில் கொண்டு, பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




