Reading Time: < 1 minute

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் குரல்களைப் போலவே போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, தவறான அரசியல் கருத்துகளைப் பரப்பும் ஒரு பெரிய யூடியூப் வலைப்பின்னல் கண்டறியப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்தச் சேனல்கள் இதுவரை சுமார் 4 கோடி (40 மில்லியன்) பார்வைகளைப் பெற்றுள்ளதாக ‘கனடிய டிஜிட்டல் மீடியா ஆராய்ச்சி அமைப்பு’ எச்சரித்துள்ளது. இந்தச் சேனல்கள் அனைத்தும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகச் செயல்படுகின்றன.

வீடியோக்களில் பேசுபவர்கள் உண்மையான மனிதர்கள் அல்ல; அவை AI மூலம் உருவாக்கப்பட்டவை. ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் மற்றும் பிரதமர் மார்க் கார்னி போன்ற அரசியல் தலைவர்களின் உருவங்களை ‘டீப்ஃபேக்’ (Deepfake) முறையில் பயன்படுத்தி, மக்களைக் கவரும் விதமான (Clickbait) படங்களை வைத்துள்ளனர்.

ஆல்பர்ட்டா மற்றும் பிற மேற்கத்திய மாகாணங்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற வரைபடங்களைச் சித்தரித்து வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர் கிறிஸ் ரோஸ் இது குறித்துக் கூறுகையில், “இந்த வீடியோக்கள் உண்மையான செய்திகளை எடுத்துக்கொண்டு, அவற்றை மிகைப்படுத்தி வழங்குகின்றன.

உதாரணமாக, ஆல்பர்ட்டாவில் 65% மக்கள் அமெரிக்காவுடன் இணைய விரும்புவதாக ஒரு வீடியோ கூறுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான எந்தவொரு கருத்துக்கணிப்பிலும் இத்தகைய தகவல் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூர் விவரங்கள் தெரியாமல், கனடாவின் ‘ஆல்பர்ட்டா புரோஸ்பெரிட்டி புராஜெக்ட்’ என்பதை அமெரிக்காவின் ‘அட்லாண்டா’ என்று தவறாக உச்சரிப்பதன் மூலம் இவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுபவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.