கனடாவில் பெற்றோல் விலை ஒரு லீற்றருக்கு சுமார் $2-ஐ எட்டியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வருவதாக Mark Carney தெரிவித்துள்ளார்.
Brampton நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்த விலை உயர்விற்கு உலகளாவிய காரணிகள் முக்கிய காரணம் என குறிப்பிட்டார்.
குறிப்பாக Iran–U.S. tensions காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே பெற்றோல் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாக விளக்கமளித்தார்.
இந்த சவாலான சூழ்நிலையில் கனடியர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre, எரிபொருள் மீதான வரிகளை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்:
- மத்திய எரிபொருள் வரி
- GST
ஆகியவற்றை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் Spring economic update-இல், எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து எந்தத் தெளிவான அறிவிப்போ அல்லது காலக்கெடுவோ இதுவரை வெளியிடப்படவில்லை.




