Reading Time: < 1 minute

டொரொண்டோவில் 22 வயது இளைஞர் ஒருவர், ஒரு பெண்ணை பல மாதங்கள் பாலியல் வியாபாரத்திற்கு கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tamil Business Directory

குறித்த நபர் மீது 27 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாக டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து போலீசார் ஏப்ரல் மாதம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரையும், பாதிக்கப்பட்ட பெண்ணையும் ஒரே பகுதியிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்ததாக தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், குற்றவாளியானவர் பெண்ணை ஏமாற்றம், கட்டாயம் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிரிஸ்தியன் ரோஷி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு மனிதக் கடத்தல், கட்டுப்பாடுகள் மூலம் பெண்களை பாலியல் வியாபாரத்திற்கு பயன்படுத்துதல், மற்றும் நிபந்தனை மீறல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.