Reading Time: < 1 minute

கனடாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் நான்காயிரத்து 109பேர் பாதிக்கப்பட்டதோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 213பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 973பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 25ஆயிரத்து 934பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 84ஆயிரத்து 306பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 232பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.