Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில், யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசித்து வந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்ணே இந்த விபத்தில் உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. டொரண்டோவின் எட்டோபிகோக் டிக்சன் (Etobicoke Dixon) பகுதியில் அவர் வீதியைக் கடந்து சென்ற போது, கனரக வாகனம் ஒன்று மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கனரக வாகனத்தை 26 வயதுடைய சாரதி ஒருவர் செலுத்தி வந்த நிலையில், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




