Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கனடாவின் அஜாக்ஸில் (Ajax) எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தொடர்பான சீ.சீ.ரீ.வி காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலயத்தில் கடமையாற்றிய காசாளரை மிரட்டி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்ல முன்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.




