Reading Time: < 1 minute

கனடாவில் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட கௌரி சங்கர் கதிர்காமநாதன் மீது மேலும் புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Tamil Business Directory

கனடாவில் 14 வயது சிறுமியை கடத்தி, பல நாட்கள் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த மே 2ஆம் திகதி கௌரிசங்கர் கைது செய்யப்பட்டார்.

30 வயதான கௌரிசங்கர் அஜாக்ஸை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாமில்டனில் இருந்து ஒரு 14 வயது சிறுமியை ஒரு சந்தேகநபர் காரில் ஏற்றி, ஆஜாக்ஸிற்கு அழைத்துச் சென்று பல நாட்கள் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த வழக்கில், 15 பிரிவுகளின் கீழ், அதில் 5 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உட்பட, கௌரிஷங்கருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கையில், அவருடன் மற்றொரு 14 வயது சிறுமியும் பாலியல் உறவில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வியாழக்கிழமை ஆஜாக்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்போது அவர் மீது பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட மொத்தம் 6 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.