Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிராம்ப்டன் நகரை சேர்ந்தவர் நிஷான் திந்த் (வயது 18) கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tamil Business Directory

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி போலிஸ் நடத்திய விசாரணையில், அவரை மற்றொரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. இதுபற்றிய தகவல் அல்லது வீடியோ காட்சிகள் எதுவும் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

அவரை சுட்டு கொன்றவரும் இந்திய வம்சாவளி இளைஞர் என தெரிய வந்துள்ளது.

அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து நிஷானை சுட்டு விட்டு, பின்னர் மருத்துவமனை அருகே விட்டு விட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி கனடா போலிஸார் விசாரணை மேற்கொண்டு, பிராம்ப்டன் நகரை சேர்ந்த பிரீத்பால் சிங் (வயது 18) என்பவரை கைது செய்தனர்.

இதன்பின் அவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், ஒன்டாரியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து விசாரணைக்கு வலு சேர்க்கும் வகையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.