Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கோடாரியுடன் ரயிலில் ஏறிய நபர் ஒருவரினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
கல்கரியின் மார்டின்டேல் எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய நபரினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
கோடாரியைக் கொண்டு குறித்த நபர் பயணிகளை அச்சுறுத்தியுள்ளார்.
ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடாரியைக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை என கல்கரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோடாரியைக் கொண்டு பயணிகளை தாக்க முயற்சித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றவியல் பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் முயற்சி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.




